பௌத்த பிக்குகள் மத்தியில் புதிய உணவு கலாசாரத்தை கொண்டு வரும் கலகொட அத்தே ஞானசார தேரர்
இலங்கையின் அரசியலில் சர்ச்சைக்குரியவராக கருதப்படும் பொதுபலசேனாவின் செயலாளர் கலகொடஅத்தே பௌத்த பிக்குகள் மத்தியில் புதிய உணவு பழக்கத்தை ஏற்ப...


சாதாரணமாக பௌத்த பிக்குகளுக்கு பொதுமக்களே உணவு தானம் கொடுப்பது வழக்கமாகும்.
இந்த நிலையில் கலகொடஅத்தே ஞானசார தேரர், பன்றி இறைச்சி உட்பட்ட மேலைத்தேய உணவுகள் விற்பனை செய்யப்படும் விருந்தகங்களில் சென்று உணவருந்துவதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த விருந்தகத்தில் மதுபான விற்பனையில் அதிகமாக இடம்பெறுவதாக ஊடகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் அவர் விருந்தகம் ஒன்றுக்கு சென்று ஏனையவர்களுடன் ஏஞ்சல் மீன் வறுவலை ருசிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பௌத்த பிக்குகளுக்கு பொதுமக்கள் உணவுதானம் செய்யும்போது கட்டுப்பாடுகளை விதிக்க சுகாதார அமைச்சு ஆலோசனை முன்வைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பௌத்த பிக்குகளுக்கு ஏற்படும் அதிக கொழுப்பு காரணமாக அவர்களுக்கு மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதை அடுத்தே இந்த ஆலோசனை செயற்படுத்தப்படவுள்ளது.
இந்தநிலையில் கலகொடஅத்தேயின் உணவுப்பழக்க வழக்கம் குறித்த கொழும்பின் ஊடகம் வியப்பை வெளியிட்டுள்ளது.