பாராளுமன்றத்துக்கு எமது ஆட்கள் குறைந்தது மூவரை அனுப்புவோம் :ஞானசார

எதிர்வரும் பொது தேர்தலில் பொதுபல சேனா அதன் வேட்பாளர்கள் குறைந்தது 3 பேரை பாராளுமன்றத்துக்கு அனுப்பும் இலக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்...

எதிர்வரும் பொது தேர்தலில் பொதுபல சேனா அதன் வேட்பாளர்கள் குறைந்தது 3 பேரை பாராளுமன்றத்துக்கு அனுப்பும் இலக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அதன் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்தின் கறுப்பு பக்கம் எனும் தலைப்பில் BBC செய்தி சேவையில் வெளியான தகவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியலில் இருக்கும் சிங்கள பௌத்த தலைவர்கள், சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகளுக்கு செவிகொடுக்காத நிலைமை தற்போது காணப்படுகின்றது.

தமிழர்களுக்காக தமிழ் இனத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், முஸ்லிம்களுக்காக முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் பாராளுமன்றத்தில் ஒரு சிலர் இருக்கின்றனர்.

ஆனால் சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகளுக்காக வாதிடுவதற்கு எந்த தலைவர்களும் முன்வருவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னொரு காலத்தில் வெள்ளைக்காரர்கள் ஆயுதங்களை கொண்டு செய்த கெடுதல்கள் தற்போது ஊடகவியலாளர்களை ஆயுதமாக கொண்டு செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பௌத்த மதத்தில் எந்தவொரு கறுப்பு பக்கமும் இல்லை எனவும் தேரர் குறிப்பிட்டார்.

இன்று நாட்டில் உயர்ந்த அறிவு படைத்தவர்கள் பௌத்த தர்மத்தை தழுவிக்கொள்ளும் சூழ்நிலையில் அதை ஜீரணிக்கமுடியாத தீவிரவாதிகள் பௌத்த தர்மம் வேரூன்றியுள்ள நாடுகள் மீது பல்வேறு வகையில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்

Related

அமைச்சர்கள் கையிலும் சிறுபான்மையினரை நீக்கிய தேசியக்கொடி.. (ராவணா பலய தேரரும் இதற்கு எதிர்ப்பு)

தேசியக்கொடியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டமையை தாம் கண்டிப்பதாக ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் தேசியக்கொடியில் உள்ள சகோதரத்துவம் மற்றும் மரியாதை என்பவற்றுக்கான பச்சை மற்றும் மஞ்சள் ந...

கூட இருந்தவர்கள் குழி பறிந்து விட்டார்கள்! புலம்பும் மஹிந்த

தன்னுடன் கூட இருந்தவர்களே தனக்கு துரோகம் செய்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மஹிந்த இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item