முடிச்சுப்போடும் கதையினை ஞானசார தேரர் நிறுத்திக் கொள்ள வேண்டும் -பைரூஸ் ஹாஜி

இலங்கையில் முகம் மூடப்பட்ட தலைக்க கவசத்தினை மோட்டார் சைக்கிள்களுக்கான சாரதிகள் அணிவதற்கு அரசாங்கம் தடை செய்ய முடியுமானல் ஏன் நாட்டில...



fairoos


இலங்கையில் முகம் மூடப்பட்ட தலைக்க கவசத்தினை மோட்டார் சைக்கிள்களுக்கான சாரதிகள் அணிவதற்கு அரசாங்கம் தடை செய்ய முடியுமானல் ஏன் நாட்டில் முஸ்லிம் பெண்கள் தங்களது முகம்களை மூடிக்கொள்ளும்படியாக ஹிஜாப் அணிவதனை தடை செய்ய முடியாது என்ற கேள்வியினை பொதுபல சேனாவின் ஞானசார தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்து நாட்டில் மீண்டும் முஸ்லிம் மக்களுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமையினை சுய அரசியல் இலாபங்களுக்காக உடைத்தெரிய நினைப்பதனை இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் என மேல் மாகான சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜி ஞானசார தேரருக்கு மேற்கண்டவாறு பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் இந்த விடயம் சம்பந்தமாக இணைய நாளிதல்களுக்கு கருத்து தெரிவித்த பைரூஸ் ஹாஜி. நாட்டில் பிரதான வங்கிகளிலும், வியாபார தளங்களிலும் முகம்மூடப்பட்ட கெல்மட்டுக்களை அணிந்தவாறே பல கொள்ளைச் சம்பவங்களும், கொலைச் சம்பவங்களும் இடம் பெற்றுள்ள படியினாலேயே இந்த அரசாங்கம், மட்டுமல்ல சென்ற அரசாங்கமும் முகம்மூடும் கெல்மட்டுக்கள் அணிவதனை தடை செய்துள்ளது. அத்தோடு நாட்டின் பாதுகாப்பு கருதி எடுக்கபட்டுள்ள முக்கிய விடயமாகவும் காலத்துகேற்றவாறு அவ்விடயம் பார்க்கப்படுகின்றது..

ஆனால் முஸ்லிம்களின் இஸ்லாமிய உரிமையாகவும், எமது நாடு ஜனநாயக நாடு என்ற அடிபடையில் ஒரு மதத்தை பின்பற்றுபவர்களுக்கு இருக்கின்ற மதச் சுதந்திரத்தின் அடிப்படையில் முஸ்லிம் பெண்கள் அவர்கள் விரும்பும் ஆடைகளை அணிந்து கொள்வதானது அவர்களது மார்க்க சுதந்திரமாகும். ஆகவே இவ்வாறன கருத்தினை முஸ்லிம்களின் மனங்கள் புன்படும் படியாக பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தெரிவித்தமையினை தான் வன்மையாக கண்டிப்பதாக பைரூஸ் ஹாஜி தெரிவித்தார்.

அத்தோடு சென்ற மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் தான் நினைத்தவாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தும், பெரும்பான்மை இன மக்களைய முஸ்லிம் மக்களுக்கு எதிராக தூண்டி விட்டு அதில் அரசியல் குளிர்காயும் திட்டங்களை அரங்கேற்றி வந்த ஞானசார தேரர் இந்த அரசாங்கத்திலும் அவ்வாறான விளையாட்டுக்களை படிப்படியாக முன்னெடுக்கலாம் என்று நினைத்து ஆட்டம் போடுவாரானால் இந்த அரசாங்கத்தினால் அவருக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என எச்சரிக்கை விடுப்பதாக பைரூஸ் ஹாஜி மேலும் தெரிவித்தார்.

Related

இலங்கை 4910501016015392363

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item