கடன் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதில் எவ்வித பிரயோசனமும் இல்லை; ராஜித சேனாரத்ன
வருமானத்தால் நாடு முன்னேற்றத்தை நோக்கி செல்லவேண்டுமே தவிர, கடன் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதில் எவ்வித பிரயோசனமும் இல்லையென அமைச்சரவை...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_7.html

வருமானத்தால் நாடு முன்னேற்றத்தை நோக்கி செல்லவேண்டுமே தவிர, கடன் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதில் எவ்வித பிரயோசனமும் இல்லையென அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், இன்று (வியாழக்கிழமை) அமைச்சர் இதனை தெரிவித்தார்.
புதிய அரசியல் முறைமை தொடர்பான சட்ட வரைபு தற்போது தயாராகி வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், இது தொடர்பில் தேர்தல் ஆணையாளருடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
தேர்தலை 100 நாட்கள் நிறைவடைந்தவுடன் நடத்த வேண்டுமென்பது முக்கியமல்ல. அதனை சரியாக செயற்படுத்த வேண்டுமென்பதே முக்கியமென தெரிவித்த அதேவேளை, 100 நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் செயற்படுத்தப்படுமென தெரிவித்தார்.
அத்துடன், கடந்த ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட நிதி மீள செலுத்தப்படாத காரணத்தால் தற்போது அதிளவான நிதி செலுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கு காரணம் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளே என்பதை சுட்டிக்காட்டினார்.