மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கவும்: அநுரகுமார
நாடாளுமன்றத்தை கலைத்து மக்களுக்கு பதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார த...


மொனராகலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் 20ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் அரசாங்கத்தினுள் இணக்கப்பாடுகள் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தோல்வியுற்ற மஹிந்த தரப்பு ஆகியன நாடாளுமன்றத்தை கலைப்பத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும் என குறிப்பிடுகின்ற போதிலும்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேர்தலுக்கு பயப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.