மஹிந்தவை காப்பாற்றியது பிரபாகரன்!– பிரதமர்
எதிர்கட்சியினால் தங்கள் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் நிராகரிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்...


நாடாளுமன்றில் நேற்று கருத்து வெளியிடும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை பாதுகாப்பதாக கூறி மஹிந்த ராஜபக்சவை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், 2005ம் ஆண்டு மஹிந்தவை காப்பாற்றியதும் பிரபாகரன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2005ம் ஆண்டும் வட மாகாண தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என பிரபாகரன் தடுத்திருக்கவில்லை என்றால் மஹிந்த ராஜபக்சவினால் இந்நாட்டின் ஜனாதிபதியாக செயற்பட்டிருக்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015ம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை கலைத்து விட்டால் இன்று ஒருவராலும் கூச்சிலிட முடியாது.
எதிர்க்கட்சியினால் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சி தலைவராக்கி கட்சியை விட்டு நீக்குவதற்கு சூழ்ச்சி ஒன்றும் இடம்பெறுவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.