இருபக்கம் இழுபடும் 20வது திருத்தச்சட்டம்
20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இதுவரையில் சமூகத்தில் தீவிரமாக கவனம் செலுத்தப்படுகின்றது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது...


தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டு வரப்படும் குறித்த திருத்தம் உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.
இன்னும் ஒரு வாரத்தில் குறித்த திருத்தம் நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்படுவதே அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக காணப்படுகின்றது.
எவ்வாறாயினும் அரசாங்கமும், எதிர்க்கட்சியும் இதுவரையில் பரஸ்பர கருத்துக்களை முன்வைத்து வருகின்றன.
ஐக்கிய தேசிய கட்சி 20வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்காது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
20வது அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசிய கட்சி தயாராகவே உள்ளது என அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒவ்வொரு இடங்களிலும் இது தொடர்பில் கலந்துரையாடுவதினால் எவ்வித பலனும் இல்லை எனவும் அது சரியான முறையில் கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு செய்யும் போது இது தொடர்பில் பூரண ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தயார் என அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சி இரட்டை வேடம் பூணுகின்றது என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.