மர்மமான X-37B விமானத்தை விண்ணில் செலுத்திய அமெரிக்கா (வீடியோ இணைப்பு)
அமெரிக்காவின் மர்மமான X-37B விண்வெளி விமானம் நேன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. X-37B எனப்படுவது அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ஆளில்லா ர...


X-37B எனப்படுவது அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ஆளில்லா ரோபோட்டிக் விமானம் ஆகும்.
இது அமெரிக்க விமானப் படைக்காக தயாரிக்கப்பட்டது. இவ்விமானம் புவிச் சுற்றுவட்டப் பாதையில் இருந்து வளிமண்டலத்துக்குள் நுழையும் போது தீப்பிடிக்காமல் இருப்பதற்கான வெப்பத்தைத் தாங்கும் உலோகத்தால் ஆனது.
இந்த விமானம் கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் திகதி ஓர் ராக்கெட் மூலம் விண்ணில் முதலில் செலுத்தப்பட்டு 2010ம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி சிறிய சேதத்துடன் புவியில் தரை இறங்கியது.
இதுவே அமெரிக்காவின் ரகசிய விண்வெளி திட்டத்தின் முதல் முயற்சியாகும். பின்னர் இண்டாவது முறையாக கேப் கனவெரல் ஏவுதளத்தில் இருந்து 2012ம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி ஏவப்பட்ட இவ்விமானம் கடந்த அக்டோபர் மாதம் தனது பயணத்தை முடித்துக்கொண்டது.
இவ்விமானம் 674 நாட்கள் விண்வெளி சுற்றுப்பாதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று(20ஆம் திகதி) ப்ளோரிடா மாநிலத்தின் கேப் கேன்வரேல் வான்படை தளத்திலிருந்து, 15.05 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 11.05 மணிக்கு) அட்லஸ்-V என்ற ராக்கெட் மூலம் X-37B விண்ணில் ஏவப்பட்டது.
இந்த செயற்கைக் கோள் ’ஹால் த்ரஸ்டர்’ எனும் புதிய தொழில் நுட்பத்திற்கான சோதனை முயற்சி என்று மட்டுமே அமெரிக்க வான்படை தெரிவித்துள்ளது.
ஆனால் இவை, நவீன உளவு மற்றும் அதி நவீன ஆயுத விவகாரங்களுக்காக பயன்படுத்தப்படுவதாக சீனா பல முறை குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.