மியன்மார் தலைநகரில் ஒன்று திரண்ட பெளத்த துறவிகள்….
அச்சத்தின் காரணமாக மியன்மாரில் இருந்து முஸ்லிம்கள் வெளியேறிவரும் நிலையில் அதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச ஊடகங்கள்...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_693.html

அச்சத்தின் காரணமாக மியன்மாரில் இருந்து முஸ்லிம்கள் வெளியேறிவரும் நிலையில் அதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச ஊடகங்கள் சிலவும் மியன்மார் அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் தங்கள் நாட்டிற்குள் இடம்பெறும் இந்த விடயங்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச தலையீடுகள் தேவையில்லை என வலியுறுத்தி இன்று பெளத்த துறவிகள் மற்றும் பொதுமக்கள் மியன்மார் தலைநகர் யன்கொன்னில் ஆர்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
மியன்மாற மீது வீண் பலி சுமத்தாதே என்ற தொனியில் பதாதைகளை சுமந்த வண்ணம் ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் சென்றதாக வும் மியன்மாரில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள முஸ்லிம்களை நாடு கடத்த அந்த நாட்டு பெரும்பான்மை பெளத்தர்களை அணிதிரள இன்று பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் சர்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.