சுதந்திர கட்சி அமைச்சர்களின் பதவி விலகலில் சிக்கலில்லை: எஸ்.பி.திசாநாயக்க
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் நால்வரின் பதவி விலகலின் காரணமாக எந்தவொரு சிக்கலும் இல்லை என அமைச்சர் எஸ்....

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_67.html

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பவித்ரா வன்னியாரச்சி, டிலான் பெரேரா, சீ.பி.ரத்நாயக்க, மற்றும் மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் நேற்றைய தினம் தமது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்தனர்.
குறித்த நான்கு அமைச்சர்களும் பதவி விலகியமையின் காரணமாக எந்தவொரு சிக்கல் நிலையும் ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் யுத்தத்தின் பின்னர் தமிழர்களின் மனங்களை கவருதல், ஜெனீவா பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சர்வதேச சமூகத்தின் உதவியை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட காரணங்களுக்காகவே தான் தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமல்லாது கட்சியின் தலைவர் என்றவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளுக்கமையவே தான் அமைச்சு பதவியை பொறுப்பேற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.