வெலே சுதாவின் சகோதரருக்கும் விளக்கமறியல்
போதைப்பொருள் வியாபாரியான வெலே சுதா என்ற சமந்த குமாரவின் இளைய சகோதரர் சாலிய குமாரவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை இன்று...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_33.html

சந்தேக நபரை இன்று இரகசிய பொலிஸாரினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன் போது வெலே சுதா குறித்து மேற்கொண்ட விசாரணையின் பிரதிபலனாக அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதற்கமைய குறித்த சந்தேக நபர் தொடர்பில் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்கள்.
இதனையடுத்து இவரை அடுத்த மாதம் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.