ஒரு குழந்தைக்கு இரண்டு தந்தைகள் இருக்கலாமா?அதிரடி தீர்ப்பு விதித்த நீதிமன்றம்
ஒரு குழந்தைக்கு இரண்டு தந்தைகளை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடுக்கப்பட்ட வழக்கில் சுவிஸ் நீதிமன்றம் அதிரடியாக தீர்...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_4.html
சுவிட்சர்லாந்தில் உள்ள St Gallen மண்டலத்தை சேர்ந்த இரண்டு ஆண்கள் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
இவர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்ற முடிவில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு வாடகை தாயின் உதவியுடன் இரு நபர்களில் ஒருவரின் விந்தணுவை எடுத்து செயற்கை கருவூட்டல் மூலம் ஒரு குழந்தையை பெற்றனர்.
குழந்தை பிறப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்பாகவே ‘குழந்தைக்கு தாங்கள் இரண்டு பேரும் தந்தைகள்’ என முறையாக பதிவு செய்திருந்தனர்.
கலிபோர்னியா மாகாணத்தில் குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கும் இரண்டு ஆண்களுக்கும் உள்ள உறவின் தொடர்பை கலிபோர்னிய நீதிமன்றம் ஆமோதித்தது.
கடந்த வருடம் சுவிஸ் St Gallen மண்டல நிர்வாக நீதிமன்றமும் கலிபோர்னிய நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரித்து உறுதி செய்தது.
ஆனால், குழந்தைக்கு தற்போது 4 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சுவிஸின் நீதித்துறை அலுவலகம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு நேற்று நீதிமன்றத்திற்கு வந்தது. தீர்ப்பின்போது பேசிய நீதிபதி, இரு நபர்களில் ஒருவருடைய விந்தணு தான் வாடகை தாயிற்கு செலுத்தப்பட்டது.
விந்தணுவை அளித்த நபருக்கு தான் குழந்தையுடன் மரபணு தொடர்பு உள்ளதால் அவர் தான் குழந்தைக்கு சட்டப்பூர்வமான தந்தையாக இருப்பார் என தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பிற்கு இரண்டு நபர்களின் வழக்கறிஞரும், குடும்ப நல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பல வருடங்களாக ஒன்றாக வசித்து வரும் இரண்டு நபர்களின் உரிமையை பறிப்பதாக இந்த தீர்ப்பு உள்ளது.
மேலும், குழந்தையின் எதிர்கால வாழ்க்கை இந்த தீர்ப்பு ஆபத்தாக அமைந்துவிடும் என குடும்பநல அமைப்புகள் விமர்சனம் செய்துள்ளன.


Sri Lanka Rupee Exchange Rate