உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்
உடன் அமுலுக்கு வரும் வகையில் 12 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அன...


உடன் அமுலுக்கு வரும் வகையில் 12 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அனுமதியுடன் இவர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய கொட்டாஞ்சேனை, மாங்குளம், கொம்பனித்தெரு, தலைமன்னார், மன்னார், நாரம்மல, கொபெய்கனே ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர இரட்டைபெரியகுளம், முள்ளியவளை, குளியாப்பிட்டி, பன்வில, தும்மலசூரிய ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.