பண்டாவின் சிங்கள மொழிக் கொள்கையே இலங்கையின் இயலாமைக்கு முதல்காரணம்! - சிங்கப்பூர் முதல் பிரதமர் லி குவான் யூ

இலங்கையில் இயல்பற்ற நிலை உருவாகிய சூழ்நிலையை சிங்கப்பூரின் தந்தையும் முன்னாள் பிரதமருமான லீ குவான் யூ வெளிப்படுத்தியுள்ளார். அவர் கடந்த வா...

இலங்கையில் இயல்பற்ற நிலை உருவாகிய சூழ்நிலையை சிங்கப்பூரின் தந்தையும் முன்னாள் பிரதமருமான லீ குவான் யூ வெளிப்படுத்தியுள்ளார். அவர் கடந்த வாரம் மறைந்துபோன நிலையிலேயே அவருடைய கருத்துக்கள் வெளியாகியுள்ளன. 1956ஆம் ஆண்டு தாம் இலங்கைக்கு வந்து கோல்பேஸ் ஹோட்டலில் தங்கியிருந்தமை, உட்பட்ட விடயங்களை அவர் குறிப்பேட்டில் எழுதியுள்ளார்.

எஸ் டபில்யூ ஆர் டி பண்டாரநாயக்கவுடன் இணைந்து உணவருந்தியமை, டட்லி சேனாநாயக்கவும் கோல்ப் விளையாடியமை போன்றவைகளை குறிப்பிட்ட அவர், உலகில் முதல் பெண் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கடுமையானவர் என்று குறிப்பிட்டுள்ளார். லண்டனில் இருந்து இலங்கைக்கு 1956ஆம் ஆண்டு சென்ற தாம், கொழும்பின் பல கட்டிடங்களை பார்க்கின்றபோது அவை போரினால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அதே ஆண்டு சொலமன் வெஸ்ட் ரிட்ஜ்பே டயஸ் பண்டாரநாயக்க சிங்கள மொழியை தேசிய மொழியாக பிரகடனப்படுத்தினார். இதுவே இலங்கையின் இயலாமைக்கு முதல் காரணமாக அமைந்துவிட்டது என்று லீ குவான் யூ சுட்டிக்காட்டியுள்ளார்.

Related

இலங்கை 5898812439346746201

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item