பலாலி விமான நிலையம் மீது இந்திய அழுத்தங்கள்!- குணதாச அமரசேகர
பலாலி விமான நிலையம் மீது இந்திய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக தேசப்பற்று அமைப்புக்களின் கூட்டமைப்பினது அழைப்பாளர் குணதாச அமரசேகர தெ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_851.html
பலாலி விமான நிலையம் மீது இந்திய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக தேசப்பற்று அமைப்புக்களின் கூட்டமைப்பினது அழைப்பாளர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
இந்திய அழுத்தம் காரணமாக பலாலி விமான நிலையம் சிவில் விமான நிலையமாக மாற்றப்பட உள்ளது.
இவ்வாறு செய்வதனால் வடக்கிற்கு ஓர் விமானப்படை விமான நிலையம் இல்லாமல் போய்விடும். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கு மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட 33000 ஏக்கர் காணியில் கடந்த அரசாங்கம் 26000 ஏக்கர் காணியை உரிமையாளர்களிடம் வழங்கியுள்ளது.
எஞ்சிய காணியில் ஐந்தாயிரம் ஏக்கர் காணி தந்திரோபாய ரீதியாகவும் தேசிய பாதுகாப்பு ரீதியாகவும் மிகவும் முக்கியமானவை. இவ்வாறான ஓர் நிலையில் தற்போதைய அரசாங்கம் காணிகளை மீள அளிப்பதானது பிரிவினைவாதிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவே கருதப்பட வேண்டும்.
இதனை ஓர் துரோகச் செயலாகவே கருத வேண்டும். இந்த அனைத்து நடவடிக்கைகளின் மூலமும் நாட்டை 2002ம் ஆண்டில் இருந்த நிலைமைக்கு மீள கொண்டு செல்ல முயற்சிக்கப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது என குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
பொரளை டீன்ஸ் வீதியில் அமைந்துள்ள அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.