பொதுத் தேர்தலில் போட்டியிட நான் யாரிடமும் வேட்பு மனு கோரவில்லை: மஹிந்த
அபயாராமய விஹாரை தேர்தல் காரியாலம் அல்லவென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வென்னப்புவ மற்றும் குளியாப்பிட்டி ஆகிய பிரதே...

வென்னப்புவ மற்றும் குளியாப்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த கட்சி செயற்பாட்டாளர்கள் அபயாராமயவில் மஹிந்தவை இன்று சந்தித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அபயாராமய ஓர் விஹாரையாகும். என்னை சந்திப்பதற்கு அடிக்கடி மக்கள் வருகின்றார்கள். மக்களை சந்திப்பதற்கு அபயாராமய விஹாராதிபதி எனக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
நான் அடிக்கடி விஹாரைகளுடன் இணைந்து செயற்படுபவன்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட நான் யாரிடமும் வேட்பு மனு கோரவில்லை. அவ்வாறு யார் வேட்பு மனு கோரினார்கள்?
அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என நான் நினைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.