பாகிஸ்தானிய இராணுவ தலைமையதிகாரி இலங்கை வந்துள்ளார்!
பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமையதிகாரி ஜெனரல் ரஹீல் சரீப் இன்று மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். ஏற்கனவே இரண்டு தடவைகளாக...


ஏற்கனவே இரண்டு தடவைகளாக இலங்கைக்கு அவர் விஜயம் செய்யவிருந்த போதிலும் உள்நாட்டு குழப்பங்களால் அவை ரத்துச்செய்யப்பட்டன.
இந்தநிலையில் இன்று இலங்கை வந்துள்ள ரஹீல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட்டோரை சந்திக்கவுள்ளார்.
பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவையும் அவர் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது