மஹிந்தவை பிரதமராக்கும் நோக்கில் புதிய பத்திரிகை வெளியீடு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் நோக்கில் புதிய பத்திரிகையொன்று பிரசுரிக்கப்படவுள்ளது. முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவ...


முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் இந்த பத்திரிகை வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இணைய தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ஆழிவுமிக்க ஓர் ஊடக நெறியை உருவாக்கும் நோக்கில் நிஜபிம என்னும் பெயரில் இந்தப் பத்திரிகை வெளியிடப்பட உள்ளது.
இது தொடர்பிலான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை அபயாராமயவில் நடைபெற்றது.
ரவி விஜேரட்ன, ருவன் பெர்டினான்டஸ், பந்துல பத்மகுமார, ஜனக பிரியந்த பண்டார, டிரான் அலஸ், மனுஸ நாணயக்கார போன்றவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றதாகவும் அந்த இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அவ்வாறான ஓர் பேச்சுவார்த்தையில் தாம் பங்கேற்கவில்லை என ருவான் பெர்டினான்டஸ் தெரிவித்துள்ளார்.