நான் ரவியுடன் வானூர்தியில் செல்லவில்லை: மேலே செல்ல எனக்கு பயம் - ஹிருணிக்கா
நான் இதுவரையில் வானூர்தியில் பயணித்ததில்லை, எனக்கு அதற்கான தேவை ஏற்பட்டதும் இல்லை என மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவ...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_98.html
போக்குவரத்திற்காக ஜனாதிபதி தேர்தலின் போது வீண் செலவு மற்றும் விரயம் தொடர்பில் அவர் தனது முகப்புத்தக கணக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது போக்குவரத்து பயணங்களுக்காக வானூர்தியையே பயன்படுத்துவார் என முகப்புத்தகத்தில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடனான புகைப்படங்களுடன் தகவல்கள் வெளிவந்தமை தொடர்பிலேயே அவர் இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.
குறித்த குற்றச்சாட்டை ஹிருணிக்கா நிராகரித்ததுடன், அப்புகைப்படங்களில் இருப்பது தான் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் வானூர்தியில் பயணிப்பதற்கு பயம் என்பதன் காரணத்தினாலேயே வானூர்திகளில் பயணிப்பதில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate