ஞானசார தேரர் பௌத்த மத கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும்: பொன்சேகா
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பௌத்த மத கோட்பாடுகளை பின்பற்ற வேண்டுமென ஐனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஸல...


பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பௌத்த மத கோட்பாடுகளை பின்பற்ற வேண்டுமென ஐனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பதவி விலகுமாறு கோரும் அதிகாரம் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ஊடகத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதுகெலும்பற்ற தலைவர் எனவும் அவர் இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டிருந்தார்.
ராஜபக்ச அரசாங்கம் போன்று நல்லாட்சி அரசாங்கம் எவரையும் பழிவாங்காத காரணத்தினாலேயே ஜனாதிபதியை, ஞானசார தேரர் இவ்வாறு விமர்சனம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என அவர் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக ஞானசார தேரரும், அவரது அமைப்பினரும் எவ்வாறான நிலைப்பாட்டை பின்பற்றி வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஞானசார தேரர் எதுவும் குறிப்பிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.