ஓய்வு பெற்றவர்களுக்கான இலத்திரனியல் அடையாள அட்டை சிறிலங்கா அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள அடையாள...
ஓய்வு பெற்றவர்களுக்கான இலத்திரனியல் அடையாள அட்டை சிறிலங்கா அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள அடையாள அட்டைகள் 1960 ஆம் ஆண்டிலிருந்து பாவனையில் உள்ளன.
ஓய்வூதியம் உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல்களை இலகுபடுத்துவதற்காக, நவீன தொழில்நுட்பத்துடனான புதிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணம், காப்புறுதி தவணைக் கட்டணங்கள் உள்ளிட்ட கட்டணங்களை எதிர்காலத்தில் இலத்திரனியல் அடையாள அட்டையின் மூலம் செலுத்த முடியும் என ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
ஓய்வூதியம் மாத்திரமன்றி, விதவைகள் மற்றும் தபுதாரர் கொடுப்பனவுகள் உட்பட சகல நவீன கொடுக்கல் வாங்கல் வசதிகளையும் எலக்ட்ரோனிக் அடையாள அட்டையின் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் கூறினார்.