19வது திருத்தம் குறித்து ஆராயும் சர்வகட்சிக் கூட்டம் இன்று!
அரசமைப்பின் 19ஆவது திருத்தம் மற்றும் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கிடையில் தற்போது எழுந்துள்ள முரண்பாடுகளுக்குத் த...


அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நாடாளுமன்றில் நிறைவேற்ற வேண்டும் என்பதில் அரசு உறுதியாகவுள்ளது. ஆனால், 19 ஆவது திருத்தத்தை அவசரப்பட்டு நிறைவேற்ற வேண்டாம் என்றும், அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் 19 ஆவது திருத்தத்தையும் தேர்தல் முறைமை மாற்றத்தையும் ஒரே வேளையில் நாடாளுமன்றில் நிறைவேற்றவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதேவேளை, 19ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்ற தமிழ், முஸ்லிம், மலையக சிறுபான்மைக் கட்சியினர் புதிய தேர்தல் முறைமை சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். இன்றைய கூட்டத்தின் இறுதியில் அரசமைப்பின் 19 ஆவது திருத்தம் மற்றும் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் இறுதி முடிவை ஜனாதிபதியும், பிரதமரும் அறிவிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேசமயம் இன்றைய கூட்டத்தில் அரசமைப்பின் 19ஆவது திருத்தம் மற்றும் புதிய தேர்தல் முறைமை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமரின் கருத்துக்களை அறிந்த பின்னரே இந்த விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் எனக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.