தொடர்ந்தும் சர்ச்சையில் மத்தல சர்வதேச விமான நிலையம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட மத்தல விமானம் தொடர்ந்தும் சர்ச்சையில் சிக்கி வருகிறது. பொருத்தம...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட மத்தல விமானம் தொடர்ந்தும் சர்ச்சையில் சிக்கி வருகிறது.

பொருத்தமன்ற இடத்தில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த விமான நிலையத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற வருமானம் மிகவும் சொற்ப அளவே.

கடந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் செப்டெம்பர் வரையான 9 மாதங்களில், சுமார் 30 ஆயிரம் பயணிகள் மாத்திரமே பயணம் மேற்கொண்டுள்ளனர்.

பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

2014ம் ஆண்டு ஜனவரி தொடக்கம், செப்டெம்பர் வரையான காலப் பகுதியில், 13,371 பயணிகள் மாத்திரமே மத்தல விமான நிலையத்துக்கு வந்துள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில், 16,712 பயணிகள், மத்தல விமான நிலையம் வழியாகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

எனினும் இந்தக் காலப்பகுதியில் கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையம் ஊடாக 5.3 மில்லியன் பயணிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர் என்றும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவின் பாரிய நிதியுதவியுடன் மத்தல விமானம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related

இலங்கை 7024915255429821708

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item