மஹிந்தவின் இல்லம் நோக்கி படையெடுக்கும் முன்னாள் அமைச்சர்கள்!
சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கான ஆதரவு சடுதியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சிறிலங்க...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_136.html
சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கான ஆதரவு சடுதியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மஹிந்தவை பார்வையிடச் செல்ல உள்ளனர்.
பந்துல குணவர்தன, எச்.எம்.சந்திரசேன, சாலிந்த திஸாநாயக்க, டி.பீ.ஏக்கநாயக்க மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் மஹிந்தவை பார்வையிடச் செல்ல உள்ளனர்.
சிங்கள புத்தாண்டு மரபுகளில் ஒன்றான உறவினர்களை பார்வையிடும் நிகழ்விற்காக இவ்வாறு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மெதமுலனவிற்கு செல்ல உள்ளனர்.
நாளை குறித்த ஐந்து பேரும் மஹிந்தவை பார்வையிட மெதமுலனவிற்கு செல்ல உள்ளனர்.
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காமல் தம்மை மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கியதாக இவர்கள் மஹிந்தவிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாளை மஹிந்தவை பார்வையிடச் செல்வார்கள் என முன்னாள் அமைச்சர் குமார வெல்கம சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு மேலதிகமாக ஏற்கனவே மஹிந்தானந்த, விமல் வீரவன்ச, குமார் வெல்கம, டலஸ் அழப்பெரும, மனுஸ நாணக்கார, உதித்த லொக்குபண்டார உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதியை பார்வையிட செல்ல உள்ளனர்.