போர்க்குற்ற விசாரணை! சிறிலங்காவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை

இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற போர்க்குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் குறித்து அமெரிக்காவிற்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பேச்சுவார்த...


இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற போர்க்குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் குறித்து அமெரிக்காவிற்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அண்மையில் சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்கத் துணை ராஜாங்கச் செயலாளா டொம் மாலினோவ்ஸ்கீ, சிறிலங்கா அதிகாரிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஜனநாயகத்தை வலுப்படுத்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் ஆகியன தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
பல்வேறு முக்கியமான விடயங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை புத்தாண்டு சாதக மாற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளதென அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி இதனைத் தெரிவித்துள்ளார்.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வாழும் மக்கள், பிறநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி ஒபாமா மற்றும் அமெரிக்க அரசு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் ஜோன் கெரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related

இலங்கை 2379610272716112537

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item