மரண தண்டனையை ரத்து செய்ய கோரி அவசர கடிதம்! தண்டனையை நிறைவேற்றுவதில் மாற்றமில்லை!- இந்தோனேசியா அரசாங்கம்
பிலிப்பைன்ஸ் நீதி திணைக்களத்தினால் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி இந்தோனேசிய சட்டமா அதிபருக்கு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. ஜன...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_591.html
பிலிப்பைன்ஸ் நீதி திணைக்களத்தினால் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி இந்தோனேசிய சட்டமா அதிபருக்கு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விடோடோ பிலிப்பைன்ஸ் பெண் மேரி ஜேன் குறித்து கலந்துரையாடுவதற்கு அவசர கூட்டமொன்றை ஆயத்தப்படுத்தியதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டு கைதி ஒருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த Mary Jane Veloso(30) என்ற பெண் 2.6 கிலோ எடையுள்ள ஹெராயின் போதை பொருளை கடத்தியதாக கடந்த 2010 ஆண்டு இந்தோனேசிய பொலிசாரால் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
அவுஸ்ரேலியாவை சேர்ந்த ஆன்ரூ ஷான் மற்றும் மயூரன் சுகுமாரன் என்ற இரண்டு கைதிகளுக்கு இன்று இரவு மரண தண்டனை நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அவுஸ்ரேலிய கைதிகளுடன் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள Mary Jane Veloso கைதிக்கும் மரண தண்டனையை நிறை வேற்ற வேண்டும் என இந்தோனேஷிய ஜனாதிபதி தற்போது அவசர ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல் கிடைக்கப்பெற்ற பிலிப்பைன்ஸ் அரசு, இந்தோனேஷிய Attorney-General-க்கு மரண தண்டனையை தடை செய்யுமாறு ஒரு அவசர கடிதத்தை அனுப்பியுள்ளது.
மூன்று கைதிகளுக்கும் ஒரே நேரத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற சூழல் நிலவி வருவதால், இந்தோனேஷிய சிறைச்சாலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தண்டனையை நிறைவேற்றுவதில் மாற்றமில்லை!- இந்தோனேசியா அரசாங்கம்
இதேவேளை, இந்த மரணதண்டனையை கண்டித்து ஐரோப்பிய மனித உரிமைகள் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது என அதன் செயலாளர் ஜக்லன்ட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எவ்வித சட்ட சவால்கள் விடுக்கப்பட்ட போதிலும் விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றுவதில் எவ்வித மாற்றமும் இல்லை என இந்தோனேசிய அரசாங்கம் தெரிவித்ததாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப் ஏ.பி.சி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.