சம்பந்தப்பட்ட அபிவிருத்தித் திட்டம் சீனாவின் தலையீடு காரணமாக நிறுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே...


கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி, சீன உதவி வெளிவிவகார அமைச்சர் லியூவ் ஜிங்சோ மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங் ஆகியோரை சந்தித்த போதே இதனை கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட அபிவிருத்தித் திட்டம் சீனாவின் தலையீடு காரணமாக நிறுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
துறைமுக நகரம் தொடர்பில் இருக்கும் சில திட்ட காரணங்களின் அடிப்படையில் தற்காலிகமாக அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் குறித்த அபிவிருத்தித் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்தித் திட்டம் தொடர்பான பிரச்சினையான நிலைமைகளுக்கு தீர்வு கண்ட பின்னர், அதனை முன்னெடுத்துச் செல்வதில் தடையிருக்காது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.