நல்லாட்சி நடக்கவில்லை என்றால் விலகி விடுவேன் என்கிறார் ஹரின் பெர்னாண்டோ
எதிர்பார்த்தது போல், இந்த அரசாங்கத்திலும் நல்லாட்சி நடக்கவில்லை என்றால், அரசாங்கத்தில் இருந்து விலகுவது குறித்து இரு முறை சிந்திக்க போவதி...


எதிர்பார்த்தது போல், இந்த அரசாங்கத்திலும் நல்லாட்சி நடக்கவில்லை என்றால், அரசாங்கத்தில் இருந்து விலகுவது குறித்து இரு முறை சிந்திக்க போவதில்லை என ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவியில் அமர்த்த நாங்களே அரும்பாடு பட்டோம்.
தற்போது அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்.
எமக்கு என்ன நடந்தது என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் நினைக்கின்றனர். அவர்களுக்கு சிறிய விரக்தி ஏற்பட்டுள்ளது.
நேர்மையாக சிந்தித்து பார்த்தால், இதன் மூலம் நாட்டுக்கு நல்லதும் நடக்கக்கூடும்.
நான் பதவிகளுக்கு ஆசைப்பட்டவன் கிடையாது. இந்த அரசாங்கத்தில் நல்லாட்சி இல்லை என்றால், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், நான் இரு முறை சிந்திக்கப் போவதில்லை.
நான் எனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்