ஐ.பி.எல் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி
நேற்று (08) இரவு நடைபெற்ற ஐ.பி.எல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்ற...


ஐ.பி.எல் டி20 போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் நாணய சுழற்ச்சியில் வென்ற கொல்கத்தா அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது ஆட்டத்தை தொடங்கியது.
கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான பிஞ்ச் 5 ஓட்டங்கள் எடுத்து ஏமாற்றினார் அதன் பின்னர் களமிறங்கிய டாரேவும் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் இணைந்த ரோகித், ஆண்டர்சன் ஜோடி அதிரடியாக செயல்பட இருவீரர்களும் அரைசதம் கடந்தனர். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 168 ஓட்டங்களை எடுத்தது.
பின்னர் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உத்தப்பா 9 ஓட்டற்களில் ஏமாற்றினார். பின்னர் இணைந்த பாண்டே, கம்பீர் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தியது. எனினும் 40 ஓட்டங்களில் பாண்டே ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் கம்பிர் அரைசதத்தை கடந்தார். சற்று நேரத்தில் கம்பீரும் நடையை கட்டினார். பின் வந்த பதான் மற்றும் யாதவ் பொறுப்புடன் விளையாடினர் இறுதியில் 19 ஆவது ஓவரிலேயே கொல்கத்தா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.