அரசியலுக்குள் நிச்சயம் வருவேன்!- மாலக சில்வா
பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கும் முன்னாள் அமைச்சர் மேவின் சில்வாவின் மகன் மாலக சில்வாää தாம் எந்த ஒரு கட்சியிலாவது இணைந்து அரசியலு...


நிச்சயமாக தாம் அரசியலுக்குள் பிரவேசிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மீது விதிக்கப்பட்டுள்ள பிணைநிபந்தனைகளை அகற்றுமாறு கோரி மாலக சில்வா மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இரவு கேளிக்கை அகம் ஒன்றில் வைத்து வெளிநாட்டவர் ஒருவரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்போது இரவு கேளிக்கை அகத்துக்கு செல்லக்கூடாது என்று நீதிமன்றம் பிணைநிபந்தனை விதித்திருந்தது.
இந்தநிலையிலேயே குறித்த பிணைநிபந்தனையை விலக்குமாறு கோரி மாலக சில்வா மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அவரை செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
தாம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் மீது மதிப்பு வைத்திருப்பதாக குறிப்பிட்ட அவர்ää தமது தந்தை ஒருபோதும் சந்திரிக்காவை தூற்றியதில்லை என்று தெரிவித்தார்.
இதேவேளை ஒரு சிறிய பிரச்சினையை அடுத்து சந்திரிக்கா தம்மை “மோட புத்தா” முட்டாள் மகனே என்று அழைத்ததாக மாலக குறிப்பிட்டார்