அமைச்சுப் பதவியை மூன்று பேர் நிராகரித்தனர்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்ட போது அந்த வாய்ப்பை மூன்று பேர் நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_776.html
மொனராகல நாடாளுமன்ற உறுப்பினர் சுமேதா ஜெயசேன, ஜி ஜெயசேன மற்றும் குருநாகல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயரத்ன ஹேரத் ஆகியோர் வாய்ப்புக்களை நிராகரித்தவர்களாவர்.
இவர்கள் மூவரும் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கி வருகின்றமை காரணமாகவே இந்த வாய்ப்பை நிராகரித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சää இன்னும் மக்கள் மனதில் இருப்பதாக ஜெயசேன சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் மேலும் சில ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்


Sri Lanka Rupee Exchange Rate