பிரித்ததானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைப் பெண்!
பிரித்தானியாவில் முன்னணி அரசியல்வாதியான இலங்கைப் பெண் ஒருவர் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார். 1979ம...

தற்பொழுது பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் சமலி பெர்னாண்டோ, இம்முறை இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில், கேம்பிரிட்ஜ் நகரில் வேட்பாளராக போட்டியிடவுள்ளார். பிரித்தானியாவின் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் 7ம் திகதி நடைபெறவுள்ளது. சட்டத்தரணியான சமலி பெர்னாண்டோ பிரித்தானியாவின் பாரிஸ்டர் பட்டதாரியும் ஆவர்.
சட்டத்தரணி தொழிலுக்கு மேலதிகமாக மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தும் அவர், மனநோயாளர்களுக்கு கையுறை ஒன்றையும் அணிவிக்க வேண்டும் எனவும் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். சமூகத்தில் மன நோயாளர்களுக்கு தேவையான உபசரிப்புக்கள் கிடைக்கப்பெறவேண்டும் என்ற ஒரு காரணத்தினாலேயே அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
அதேவேளை அவர் தற்பொழுது பிரித்தானியா அரசியல் மேடைகளில் பேசப்படும் ஒரு பெண்ணாகவும் காணப்படுகிறார். தனது உயர்கல்விக்காக அரசியலை தெரிவு செய்த காலம் தொட்டு, அரசியலில் அதிக ஆர்வம் ஏற்பட்டதாக சமலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.