ஐ.நா சிறப்பு நிபுணர் இன்று வடக்கிற்குப் பயணம்! - முதலமைச்சர், மன்னார் ஆயருடன் சந்திப்பு.
பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை கொண்டுள்ள முன்னேற்றங்களை ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கி...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_43.html

உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள உருவாகாமல் உத்தரவாதப்படுத்தலுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப், 6 நாள் விஜயம் மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வந்தடைந்தார். அவர் பலதரப்பட்டவர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகின்றார். இன்று வடக்கிற்கு செல்லவுள்ள அவர், அங்கு வடக்கு மாகாணசபையினர் மற்றும் சிவில் சமூகத்தினர் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate