இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி.வரிச் சலுகை! - ஐரோப்பிய ஒன்றியம் தீவிர ஆலோசனை
ஜீ.எஸ்.பி.வரிச் சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கை...


ஜீ.எஸ்.பி.வரிச் சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் நேற்று ஜனாதிபதியை சந்தித்தபோது இதனைத் தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டேலி இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். இந்தச் சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை மீன்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நீக்குதல் மற்றும் ஜீ.எஸ்.பி. சலுகையை மீண்டும் வழங்குவது தொடர்பாக கூடிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தூதுவர் டேவிட் டேலி இதன்போது உறுதியளித்துள்ளார்.
மனித உரிமைகளை உறுதிப்படுத்தல் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியயழுப்பல் போன்றவற்றிற்கு அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன் போது இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பாராட்டுகளைத் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.