19வது திருத்தத்துக்கு எதிராக 16 மனுக்கள்! - இன்று உயர்நீதிமன்றம் விசாரணை.

19 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள 16 மனுக்கள் மீதான வழக்கு விசாரணை இன்று பிரதம நீதியரசர் க...

19 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள 16 மனுக்கள் மீதான வழக்கு விசாரணை இன்று பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் அடங்கலாக மூவரடங்கிய நீதியரசர் குழு முன்னிலையில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும் அரசியலமைப்பின் 19 வது திருத்தச் சட்டம் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்புடனும் நிறை வேற்றுமாறு கோரி 16 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை பத்திரிகை நிறுவனம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஜெப் அலகரத்னம், மக்கள் ஐக்கிய முன்னணி சோமவீர சஞ்ஜீவ, எல்.ஜி. பெரேரா, சட்டத்தரணி உதய கம்மம்பில, தர்சன வீரசேகர, வண. பெங்கமுவே நாளக தேரர், எஸ். வணிகசேகர, வண. மாதர ஆனந்த தேரர், டி. துவகே, மொஹமட் அப்பாஸ், வசந்த பிரியலால், கே.எஸ்.உபுல் பெர்ணாந்து நிசாந்த நலிந்த, சட்டத்தரணி, கோமின் தயாசிரி ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள் ளனர். வழக்கு விசாரணையை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அறிவிக்கப்பட உள்ளது.

Related

இலங்கை 2882144695481655937

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item