யாழில் செய்தியாளர் தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கையை சர்வதேச செய்தியாளர் சம்மேளனம் கண்டித்துள்ளது!
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் ஒருவர் கடந்த 8ம் திகதியன்று கைது செய்யப்பட்ட சம்பவத்தை சர்வதேச செய்தியாளர் சம்மேளனம் கண்டித்துள்ளது. இந்த ...


இந்த விடயத்தில் பொலிஸாரின் கடும் நடவடிக்கையானது ஊடகத்தை அடக்கும் வகையில் அமைந்துள்ளதாக அந்த சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பள்ளிச்சிறுமி ஒருவரை பொலிஸார் தாக்கியதாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் என்.லோகதயாளன் என்ற செய்தியாளர் கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் அவரை பொலிஸார் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோரிய போதும் நீதிமன்றம் செய்தியாளரை ஏப்ரல் 9ம் திகதியன்று பிணையில் செல்ல அனுமதித்தது.
எனினும் மே 29ம் திகதி மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்தியாளர் வெளியிட்ட செய்தி உண்மையில்லை என்ற அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தவிர யாழ்ப்பாணத்தின் மூன்று செய்தியாளர்கள் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்ட சம்பவத்தையும் சம்மேளனம் கண்டித்துள்ளது.
இந்தநிலையில் நாட்டில் ஊடக சுதந்திரத்தை காக்கும் வகையில் அரசாங்கம் இதுகுறித்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று செய்தியாளர் சம்மேளனம் கோரியுள்ளது.