ஒப்பந்தங்களை மீறி இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை
தொழில் ஒப்பந்தங்களை மீறி, சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தராதரம் பாராது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_310.html
இஸ்ரேலில் விவசாயத்துறை சார்ந்த தொழில்களுக்காக சென்றுள்ள இலங்கைப் பணியாளர்களே அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர் என பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேவைக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கைப் பணியாளர்கள் நாடு திரும்பாமல் இருக்கின்றமை அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்குவதாக அமைந்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளால் இஸ்ரேலின் தொழில் சந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் நிலை தோன்றியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, எதிர்காலத்தில் தொழில்வாய்ப்புக்காக இஸ்ரேல் செல்வதற்கு திட்டமிட்டுள்ள இளைஞர்களுக்கும் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையின் கீழ், தொழில் ஒப்பந்தம் நிறைவடைந்ததும் உடனடியாக பணியாளர்களை நாட்டிற்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்களின் உறவினர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது