பசறை வீதியில் தனியார் பஸ் குடைசாய்ந்தது: 37 பேர் காயம்
மடுல்சீமை – பசறை வீதியில் இன்று நண்பகல் தனியார் பஸ் ஒன்று குடைசாய்ந்ததில் 37 பேர் காயமடைந்துள்ளனர். குருவிகலயில் இருந்து பசறை நோக்கிப் ப...
http://kandyskynews.blogspot.com/2015/04/37.html

குருவிகலயில் இருந்து பசறை நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றே 4 ஆம் கட்டை பகுதியில் விபத்துக்குள்ளானதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்த 37 பேரும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 23 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Sri Lanka Rupee Exchange Rate