ரவி கருணாநாயக்க நிஷா பிஸ்வால் சந்திப்பு
அமெரிக்காவிற்கான உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் ரவி கருணாநாயக அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலை இன்று சந்தி...


இச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லிணக்கம் குறித்து பேசப்படும் எனவும் தெரிவிக்கபப்டுகின்றது. அமெரிக்காவிற்கான உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிதியமைச்சரின் நிகழ்ச்சி நிரலில் இச் சந்திப்பு உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்றைய தினம் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் செயலாளர் கத்தரீன் நோவெலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச் சந்திப்பின் போது இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.