அனுஷ்கா சர்மாவை திட்டியவர்கள் வெட்கப்பட வேண்டும்: மெளனம் கலைத்த கோஹ்லி (வீடியோ இணைப்பு)
உலகக்கிண்ண போட்டியில் இந்தியா வெளியேறியதற்கு அனுஷ்கா சர்மாவை குறை கூறியவர்கள் வெட்கப்பட வேண்டும் என்று விராட் கோஹ்லி கூறியுள்ளார். உலகக்...


உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதியில் அவுஸ்திரேலியாவிடம் அடிவாங்கிய இந்தியா பரிதாபமாக தொடரை விட்டு வெளியேறியது.
அவுஸ்திரேலியாவை துணை அணித்தலைவர் விராட் கோஹ்லி அடித்து துவைத்தெடுப்பார் என்று ஒட்டுமொத்த தேசமும் ஆவலோடு உற்று நோக்கியது.
ஆனால் அவரோ பொறுப்பே இல்லாமல் விளையாடி 1 ஓட்டம் மட்டுமே எடுத்து வெளியேற, சில ரசிகர்கள் கண்ணீர் விட்டனர்.
மேலும் கேலரியில் அமர்ந்திருந்த கோஹ்லியின் காதலி அனுஷ்கா சர்மாவும் அதிர்ச்சியில் உறைந்து போனார். இது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த உடன் விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா ஜோடியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர்.
இவ்விவகாரம் தொடர்பாக விராட் கோஹ்லி தொடர்ந்து அமைதி காத்து வந்தார்.
இந்நிலையில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்பான விழா ஒன்றில் கலந்துகொண்ட கோஹ்லி இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் பற்றி அவர் கூறுகையில், “தங்களது எண்ணத்தில் இருந்தவை எல்லாற்றையும் பேசியவர்களால், நான் மிகவும் காயம் அடைந்தேன். விமர்சனம் செய்தவர்கள் அவர்களாகவே வெட்கப்பட வேண்டும்.
தனிப்பட்ட முறையில் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகமான போட்டிகளில் இந்தியா வெற்றி பெறுவதற்கு நான் மிகவும் உதவிசெய்தேன்.
என்னைவிட அணியில் சிறப்பாக செயல்பட்டவர்கள் யாரும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
வெறும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து வரும் எதிர்ப்புகளை பார்க்கையில் எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருகிறது என்று கூறியுள்ளார்.