மஹிந்த வடக்கு கிழக்குக்கு வெளியே 58 லட்சம் மக்களின் தலைவர் : தினேஷ்
மஹிந்த ராஜபக்சவுக்கு 58 லட்சம் மக்கள் வாக்களித்தமையானது வடக்கு ,கிழக்கை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள மக்கள் அவரை தலைவராக ஏற்றுகொண்டதையே க...


மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கு தமிழர்களே என்றும், விடுதலைப் புலிகளை தோற்கடித்த காரணத்தினால் மஹிந்தவை தோற்கடிக்க வேண்டிய அவசியம் தமிழர்களுக்கு இருந்ததாக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரான தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தாம் ஆட்சிக்கு வந்தால் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவை கொலை செய்யப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியமை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தினேஸ் குணவர்த்தன பதிலளிக்க மறுத்துள்ளார்.
எனினும் மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கு தமிழர்களை அவர் காரணம் கூறியுள்ளார்.விடுதலைப் புலிகளை தோற்கடித்த காரணத்தினால் மஹிந்தவை தோற்கடிக்க வேண்டிய அவசியம் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் மஹிந்த ராஜபக்சவுக்கு 58 லட்சம் மக்கள் வாக்களித்தமையானது வடக்கு கிழக்கை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள மக்கள் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டதையே குறித்து நிற்கிறது என்று தினேஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள அவர், மஹிந்த ராஜபக்ச செல்வாக்கை கருதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் அவருடன் இணைந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
அதேவேளை அவர் , எங்கள் நாட்டு தேசிய கீதத்தை அவமானப்படுத்திய ஒரே ஜனாதிபதி இன்று மைத்திரிபால சிறிசேன தான். ஜனாதிபதி பதவி பிரமானம் பெற்றுக்கொள்ளும் நிகழ்வுகளில் பதிவு செய்யப்பட்ட ஒளிநாடாக்களை மீண்டும் ஒளிபரப்பு செய்து பார்க்குமாறு தொலைகாட்சி சேவைகளுக்கு நான் கூறுவேன்.
பதவிபிரமானம் பெற்றுக்கொள்ளும் தினத்தன்று தேசிய கீதம் பாடப்படும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காரினுள் இருந்தார். தேசிய கீதத்தை மதிக்காத தலைவர் ஒருவர் எவ்வாறு நாட்டு மக்களை நேசிப்பார் என்று தினேஸ் குனவர்தன கேள்வியெழுப்பியுள்ளார்.
மக்களுக்கு மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளை எட்டி உதைப்பதற்கான தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் மேற்கொள்வதனை காணமுடிகின்றதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.