சீனாவில் தாடி வளர்த்த முஸ்லிம் நபருக்கு 6 ஆண்டுகள் சிறை மனைவிக்கு 2 ஆண்டுகள்..!!
சீனாவின் அரச அடக்குமுறையை எதிர்கொள்ளும் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்டிருந்த ‘Xinjiang பிராந்தியத்தில்ஒரு முஸ்லிம் குடும்பஸ்தர் தாடிவ...

கஷ்கர் நகர நீதிமன்றமே 38 வயதான உய்குர் முஸ்லிம் நபருக்கும் அவரது மனைவிக்கும் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. இவர்கள் பிரச்சினையை தூண்டியதாக நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது. தாடி வளர்ப்பதை எதிர்த்து பிரசாரம் செய்யும் சீனா அரசு தாடி வளர்ப்பவர்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு பரிசில்கள் வலுவதாகவும் 2014 ஆம் ஆண்டு அறிவித்துள்ளது
அதேபேன்று புர்கா ஆடைக்கு எதிராக பிரசாரங்களில் சீனா அரசு பிரசாரத்தில் ஈடுபடுவதுடன் அதை தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தி தண்டனைகளையும் சட்டமாக்கியுள்ளது . சீனா முஸ்லிம் மக்களின் மத மற்றும் கலாசாரத்திற்கு எதிரான சீன நிர்வாகத்தின் அடக்குமுறையாலேயே ”Xinjiang பிராந்தியத்தில் பதற்றம் தீவிரம் அடைந்திருப்பதாக உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டுகின்றன