சிங்கள கிராமங்களை அகற்றிவிட்டு முஸ்லிம் கிராமங்களை அமைக்க ரிஷாத் முயற்சியாம் : குற்றச்சாட்டு
வவுனியா மாவட்டத்தில் உள்ள போகஸ் வேவ மற்றும் நந்தமித்ர ஆகிய கிராமங்கள் உட்பட சிங்கள கிராமங்களை அகற்றிவிட்டு புதிதாக முஸ்லிம் கிராமங்களை உரு...


பெப்பிலியானவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த தேசிய அரசாங்கம் இளைஞர்களுக்கு வை-பையையும், வயோதிபர்களுக்கு கொத்தமல்லியும் வழங்கி தனது அரசில் உள்ள தவறுகளை மூடிமறைக்க முயற்சிக்கிறது தற்பொழுது வடக்கில் முகாம்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமின்றி பலாலியில் அதி பாதுகாப்பான 1000 ஏக்கர் காணி சிவில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
எவ்வித தடைகளுமின்றி இந்நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் தமிழ்,முஸ்லிம் மக்கள் வாழ்கின்றார்கள்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள போகஸ்வெவ மற்றும் நந்தமித்ர ஆகிய கிராமங்கள் உட்பட சிங்கள கிராமங்களை நீக்கிவிட்டு புதிதாக முஸ்லிம் கிராமங்களை உருவாக்குவதற்கு அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் இளிவான விடயமாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்