உலக அளவில் 2450 போட்டியாளர்கள் கலந்துகொண்ட குவைத் அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவன் முதலிடம்.
கௌரவத்துக்குரிய முன்னால் குவைத் பாராளுமன்ற உறுப்பினரும் சபாநாயகருமான ‘ஜாஸிம் கராபி’ அவர்களின் மறைந்த தந்தை ‘முஹம்மத் அப்துல் முஹ்ஸின் கராபி’...

http://kandyskynews.blogspot.com/2015/04/2450.html
கௌரவத்துக்குரிய முன்னால் குவைத் பாராளுமன்ற உறுப்பினரும் சபாநாயகருமான ‘ஜாஸிம் கராபி’ அவர்களின் மறைந்த தந்தை ‘முஹம்மத் அப்துல் முஹ்ஸின் கராபி’ அவர்கள் நினைவாக வருடாந்தம் நிகழ்த்தப்பட்டு வரும் அல்-குர்ஆன் மனனப் போட்டியின் 18 ஆவது வருட பரிசளிப்பு விழா கடந்த சனிக்கிழமை(18) ஷாமியா பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது திவானியாவில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது .
இது குவைத்தில் அரபி ,அரபி அல்லாதவர்களுக்கு ஒன்றாகவே நடாத்தப்படும் தேசிய ரீதியிலாக மிகப் பெரிய போட்டியாகும்.இந்த வருடப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 2450 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் .
இதில் சிறார்கள் ,ஆண்கள் ,பெண்கள் மற்றும் விஷேட தேவை உடையவர்களுக்கான போட்டிகள் தனித் தனியே நடாத்தப்பட்டன .
இதில் முதலாம் ஜூஸ்உ மனனப் பிரிவில் மீயல்லை யைச் சேர்ந்த ஹரீஸ் ஸாலிஹ் , ஸிமாயா ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் புதல்வன் ‘அப்துல் அஸீஸ் ஹரீஸ்’ சம முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார் . ஏனையவர்கள் அரபிகள் என்பது குறிப்பிடத் தக்கது
2013 ஆம் ஆண்டு இவர் அரை ஜூஸ்உ மனனப் பிரிவில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டார். 2014 ஆம் ஆண்டு இவரது மூத்த சகோதரர் ‘அப்துல்லாஹ் ஹரீஸ் ‘ முதலாம் ஜூஸ்உ மனனப் பிரிவில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டார் .
அதேபோல் கடந்த பல வருடங்களாக இவர்களும் ,இவர்களது தாயாரும் இன்னும் பல்வேறுபட்ட அல் -குர்ஆன் மனன , ஓதல் போட்டிகளில் முதலாம் இடங்களை பெற்றுக் கொண்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது