இலங்கையில் போல யேமனிலும் தோல்வியடையும் பான் கீ மூன்
இலங்கையில் போலவே யேமனிலும் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் தோல்வியடைந்து வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகமொன...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_334.html
சர்வதேச ஊடகமொன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது ஐ.நா பொது செயலாளர் பான் கீ மூன் பொது மக்களை பாதுகாக்க தவறிவிட்டார்
யுத்தத்தின் பின்னர் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இவ்விவகாரத்தை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
பொது செயலாளரின் இந்த அசமந்த போக்கினால் இலங்கையில் லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் யேமனிலும் ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு பொது மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தவறிழைத்து விட்டது என குறித்த ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.