ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட கூட்டணியினரின் முயற்சியில் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 19ம் திருத்தச் சட்டம் 215 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. குறித்த சட்ட மூலத்துக்கு எதிரா 1 வாக்கு பதிவாகியிருந்த அதேவேளை ஏழு பேர் பாராளுமன்றத்திற்கு சமூகமளித்திருக்கவில்லையென்பதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் சரத் வீரசேகரவே எதிர்த்து வாக்களித்திருந்த நிலையில் சுயாதீன உறுப்பினர் அஜித் குமார வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.