ஜெனிவா பேரணியில் மைத்திரியின் கொடும்பாவி எரிப்பு! - வழக்கத்துக்கு மாறாக பாதுகாப்பு அதிகரிப்பு
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா முன்பாக நேற்று அணிதிரண்ட புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொடும்பாவியை வீதியில் க...

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா முன்பாக நேற்று அணிதிரண்ட புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொடும்பாவியை வீதியில் கட்டி இழுத்துச் சென்று எரித்துள்ளனர். பெருந்திரளாக குவிக்கப்பட்ட பொலிஸார் அதியுச்ச பாதுகாப்பை வழங்கி இவ்வாறு இழுத்துச் செல்லப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் உருவப்பொம்மையை எரிக்க விடாது தடுத்துள்ளனர்.
|
இதற்கிடையே, ஐ.நா முன்றலில் கூட்டம் நடை பெறும் போது பாதுகாப்பு சாதாரணமாக இருப்பது வழமை. இம்முறை வழமைக்கு மாறாக பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமாக இருந்ததுடன் ஜெனிவா காவல்துறை அதி உச்ச பாதுகாப்பு வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஊர்வலம் ஆர்பமான இடத்திலிருந்து கூட்டம் இடம் பெற இருந்த இடம் வரை காவல் துறை வாகனம் பாதுகாப்பு வழங்கியதுடன் வீதியின் இரு மருங்கிலும் பொலிசாரின் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டிருந்தது. ஐ.நா பிரதான நுழைவாயிலில் முன்னால் சிவப்பு வெள்ளை நிற கயிறுகலால் மறிக்கப் பட்டதுடன் முன்பக்கமும் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டிருந்தது.
![]() ![]() |