யாழ். இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது! - இத்தாலி செல்ல முயன்றபோது சிக்கினர்.
இத்தாலி செல்ல முற்பட்ட இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்கா விமான நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போலி கடவு...

![]()
இத்தாலி செல்ல முற்பட்ட இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்கா விமான நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போலி கடவுச்சீட்டு விஸாக்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட் டுள்ளது. கைதுசெய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவர். இவ்விருவரும் பஹ்ரைனூ டாக இத்தாலி செல்ல முற்பட்ட போதே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட் டனர்.
|
மிஹின் லங்கா விமான சேவையினூடாக பஹ்ரைன் செல்வதற்காக நேற்று முன்தினம் இவர்கள் விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்த ஆவணங்களை சோதனையிட்ட போது ஒவ்வொருவரும் இரண்டு கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பது தெரியவந்தது. ஒரு கடவுச் சீட்டில் இத்தாலி செய்வதற்கு போலியான வீஸா ஸ்டிக்கரும் இன்னொரு கடவுச்சீட்டில் பஹ்ரேன் செல்வதற்காக சட்டப்படி பெற்றுக்கொள்ளப்பட்ட வீஸா ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏற்கனவே இருந்த கடவுச்சீட்டு தொலைந்து விட்டதாக கூறியே இவர்கள் மேலுமொரு கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
|