நாட்டை விட்டு வெளியேறாமைக்கான காரணத்தை கூறும் கோத்தபாய
அமெரிக்காவிற்கு சென்றால் தான் மின்சார நாற்காலியில் உட்கார வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித...


அமெரிக்காவிற்கு சென்றால் தான் மின்சார நாற்காலியில் உட்கார வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற தொலைகாட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவ்வாறானதொரு சம்பவம் நடைபெற வேண்டும் என்பதனை விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள் எனவும் அமெரிக்காவின் குடியுரிமை இருந்தும் இக்காரணத்தினாலேயே தான் அங்கு செல்லாமல் இருந்தேன் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனக்கு தொடர்புடையதாக கூறப்படும் ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனம் சட்ட விரோதமான நிறுவனம் அல்ல என்றும் அவ் நிறுவனம் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமெனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை எவன்காட் நிறுவனத்தின் கீழ் நடாத்தி சென்ற மிதக்கும் ஆயுத களஞ்சியத்தினுள் எவ்வித சட்டவிரோதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.