தேர்தல் முறைமை மாற்றத்திற்கு இணங்கவில்லை: முஸ்லிம் காங்கிரஸ்
தேர்தல் முறைமை மாற்றத்திற்கு எவ்வித இணக்கப்பாட்டையும் வெளியிடவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. தேர்தல் முறைமையில் ...


தேர்தல் முறைமை மாற்றத்திற்கு எவ்வித இணக்கப்பாட்டையும் வெளியிடவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட உள்ள போதிலும் அது தொடர்பில் தமது கட்சிக் எவ்வித உடன்பாடும் கிடையாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் மாற்று யோசனைகளை முன்வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ஏனைய சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இந்த பேச்சுவார்த்தைகளுக்காக ஜே.வி.பியும் இணைந்து கொள்ளும் என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.